'ஆப்பிள் இருக்கிறதா? - படத்திற்கு ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு கிச்சா சுதீப் பதில்


Why did you give the film an English title? Kiccha Sudeeps answer to the question
x

'நான் ஈ', 'புலி' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப், தற்போது 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப், தற்போது ஆக்சன் திரில்லர் படமான 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார். கிச்சா சுதீப் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்குகிறார்.

வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ளார். சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப் படத்திற்கு ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"உங்களிடம் ஆப்பிள் இருக்கிறதா? ஏன் ஆப்பிள் என்று கன்னடத்தில் சொல்ல முயற்சிக்கக் கூடாது? அதனால் என்ன பிரச்சினை?" என்றார்.


Next Story