'காஞ்சனா 4' படத்தில் இணைந்த சீரியல் நடிகை?


Which serial actress has joined the film Kanchana 4?
x

இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் நோரா பதேகி நடிப்பதாக கூறப்படும் நிலையில், மேலும் ஒரு நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனை தொடர்ந்து ராகவேந்திரா புரொடெக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 4' உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல சீரியல் நடிகை ஹிமா பிந்து இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.


Next Story