'காஞ்சனா 4' படத்தில் பேயாக நடிக்கும் முன்னணி நடிகை?
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க உள்ள 'காஞ்சனா 4' படத்தில் பிரபல நடிகை பேய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சென்னை,
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'சந்திரமுகி-2', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்களை தொடர்ந்து, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் 'காஞ்சனா 4' படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, காஞ்சனா 4 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே பேய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.