'தலைவர் அந்த சிகரெட் ஸ்டைலை செய்தபோது...' - பிரதீப் ரங்கநாதன்


When Thalaivar did that cigarette style , I was done
x

பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்தது. இதனையடுத்து, பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பிரதீப் ரங்கநாதன் வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பாக பிரதீப் பகிர்ந்த புகைப்படத்துடன் 'தலைவர் அந்த சிகரெட் ஸ்டைலை செய்தபோது, அங்கையே விழுந்து விட்டேன். கடவுளுக்கு நன்றி' என்று பகிர்ந்திருக்கிறார்.

1 More update

Next Story