'அஜித் வாழ்க, விஜய் வாழ்க' என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? - அஜித் கேள்வி
அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? என அஜித் கேள்வி எழுப்பி உள்ளார்.
துபாய்,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். இந்த தொடரில் அஜித்தின் அணியான பாஸ் கோட்டனின், ரேசிங் 991 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது.
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் மற்றும் அவரது அணியினருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கார் பந்தயத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?. உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் ரசிகர்கள் அனைவரும் முதலில் உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருக்கிறேன். அதேபோல என்னுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி சிறப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.