'என்ன நடந்தாலும் சரி...சிரித்துக்கொண்டே நகருவோம் - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு ஓட்டலை விக்னேஷ் விலைக்கு கேட்டதாக பரவிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு புதுச்சேரி மந்திரி விளக்கம் கொடுத்திருந்தநிலையில், விக்னேஷ் சிவன் தற்போது பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனுடன் பகிர்ந்த பதிவில், 'என்ன நடந்தாலும் சரி...சிரித்துக்கொண்டே நகருவோம்' என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story