ஸ்ரீலீலா படத்தின் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் வார்னர்?


ஸ்ரீலீலா படத்தின் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் வார்னர்?
x
தினத்தந்தி 4 March 2025 10:21 PM IST (Updated: 5 March 2025 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீலீலா தற்போது, ராபின்ஹுட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

சென்னை,

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்த ஸ்ரீலீலா தற்போது, ராபின்ஹுட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிதின் கதாநாயகனாக நடித்த இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்தில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக தெரிகிறது. டேவிட் வார்னர் அதற்காக ஒரு நாளைக்கு ரூ.1கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது..

1 More update

Next Story