விக்ரமின் 'வீர தீர சூரன்' டிரெய்லர் - வைரல்

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும்நிலையில், முதலில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு ஆவடி வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story