விஜய்யின் 'ஜன நாயகன்' படப்பிடிப்பு நிறைவு


விஜய்யின் ஜன நாயகன் படப்பிடிப்பு நிறைவு
x

'ஜன நாயகன்' விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் 'தளபதி வெற்றி கொண்டான்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திண்டுக்கல் கொடைக்கானல் பகுதியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இறுதி கட்டப்படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விஜய் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பின் இறுதி நாளில் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இப்படத்தின் டீசர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 22 தேதி விஜய்யின் பிறந்த நாளில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story