விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின் 2வது லுக் வெளியீடு


விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் 2வது லுக் வெளியீடு
x
தினத்தந்தி 26 Jan 2025 10:43 AM (Updated: 27 Jan 2025 6:54 AM)
t-max-icont-min-icon

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படமாகும். இப்படத்தை எச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. 'அனிமல் மற்றும் கங்குவா' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது

இந்நிலையில் 'ஜன நாயகன்' படத்தின் 2வது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் 'நான் ஆணையிட்டால்..' என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story