விஜய்யின் 'ஜன நாயகன்' - வெளியான முக்கிய தகவல்


Vijay’s Jana Nayagan: All set for the big announcement
x

இன்று இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், இன்று இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே இந்த படமானது வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டநிலையில் தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Next Story