சென்னையில் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி ரத்து


சென்னையில் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி ரத்து
x
தினத்தந்தி 28 Dec 2024 3:34 PM IST (Updated: 28 Dec 2024 4:42 PM IST)
t-max-icont-min-icon

காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருந்தது.

இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், " சில எதிர்பாராத காரணங்களாலும், மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சி, வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும். உங்கள் புரிதலுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story