விஜய் ஆண்டனி நடிக்கும் 'ககன மார்கன்' படத்தின் அப்டேட்


விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் அப்டேட்
x
தினத்தந்தி 22 Nov 2024 9:04 PM IST (Updated: 24 Nov 2024 9:12 AM IST)
t-max-icont-min-icon

விஜய் ஆண்டனி நடிக்கும் 'ககன மார்கன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ஹிட்லர்' எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.

தற்போது விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ககன மார்கன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story