'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியாவதையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு


கோட் படத்தின் டிரெய்லர் வெளியாவதையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
x
தினத்தந்தி 17 Aug 2024 8:51 AM GMT (Updated: 17 Aug 2024 10:35 AM GMT)

'கோட்' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

'கோட்' படத்தின் டிரெய்லர் இன்று (ஆக. 17) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் டிரெய்லர் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கோட் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.


Next Story