''கூலி'' படத்தில் கமல்ஹாசனா?


Versatile actor to provide voiceover to Rajinikanth’s Coolie
x

கூலி படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

ரஜினிகாந்தின் ''கூலி'' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படம் தங்கக் கடத்தல், மாபியாவை பற்றியதாக தெரிகிறது.

இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கூலி படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல் ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக கமலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த வாரம் கமல் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தில், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன்,ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.

1 More update

Next Story