சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் 2-வது பாடலின் அப்டேட்


சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படத்தின் 2-வது பாடலின் அப்டேட்
x
தினத்தந்தி 2 Jan 2025 11:31 AM IST (Updated: 4 Jan 2025 6:27 PM IST)
t-max-icont-min-icon

சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் முதல் பாடலான 'புஜ்ஜி தல்லி' வெளியாகி 40 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி உள்ளது. இந்நிலையில், 2-வது பாடலான 'சிவசக்தி' வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 4-ந் தேதி மாலை 05.04 மணியளவில் இப்பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பதிவை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.


Next Story