பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கவுள்ள படத்தின் அப்டேட்


பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கவுள்ள படத்தின் அப்டேட்
x
தினத்தந்தி 25 March 2025 11:32 AM (Updated: 26 March 2025 1:32 PM)
t-max-icont-min-icon

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள படத்தின் அப்டேட் நாளை காலை வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'டிராகன்'. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ள இதில், நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை காலை 11.07 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.


Next Story