ஓடிடியில் வெளியாகும் மம்முட்டியின் 'டர்போ'


ஓடிடியில் வெளியாகும் மம்முட்டியின் டர்போ
x
தினத்தந்தி 24 Jun 2024 11:31 AM GMT (Updated: 3 July 2024 9:36 AM GMT)

மம்முட்டியின் 'டர்போ' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டர்போ'. இப்படத்தை வைசாக் இயக்கினார். வைசாக் இதற்கு முன் மோகன்லாலை வைத்து 'புலிமுருகன்' திரைப்படத்தை இயக்கினார். 'டர்போ' படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதி இருந்தார். இதில், சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர், சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர்.

கிறிஸ்டோ சேவியர் இசையமைத்த இப்படம் கடந்த மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'டர்போ' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'டர்போ' படம் சோனி லிவ் ஓடிடியில் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மம்முட்டி நடிப்பில் வெளியான 'பிரம்மயுகம்' என்ற திகில் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.


Next Story