பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு ஜோடியாகும் 'அனிமல்' பட நடிகை?


Tripti Timri to pair up with popular Bollywood actor Shahid Kapoor?
x

'அனிமல்' பட நடிகை திரிப்தி டிம்ரி பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக உள்ளதாக தெரிகிறது.

மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான திரிப்தி டிம்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'அனிமல்' படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

அதனைத்தொடர்ந்து, 'பேட் நியூஸ்', பூல் புலையா 3, 'விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ' ஆகிய படங்களில் நடித்த இவர் மலையாள நடிகர் பகத்பாசில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக சொல்லப்படும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திரிப்தி டிம்ரி தொடர்பான மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் நடிக்க உள்ள 'அர்ஜுன் உஸ்தாரா' படத்தில் அவருக்கு ஜோடியாக திரிப்தி டிம்ரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, அடுத்த மாதம் 6-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசால் பரத்வாஜ் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story