நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட 'டாக்சிக்' படக்குழு


நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு  கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட டாக்சிக் படக்குழு
x
தினத்தந்தி 8 Jan 2025 11:17 AM IST (Updated: 8 Jan 2025 11:42 AM IST)
t-max-icont-min-icon

இன்று நடிகர் யாஷ் தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

டாக்சிக் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கிறது.

இன்று நடிகர் யாஷ் தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு டாக்சிக் படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் நடிகர் யாஷ் ராமாயணம் திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story