2024-ல் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்


2024-ல் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்
x
தினத்தந்தி 23 Dec 2024 9:50 PM IST (Updated: 23 Dec 2024 9:54 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் 20-க்கும் குறைவான படங்களே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இடங்களில் உள்ள தமிழ் படங்களை தற்போது காணலாம்.

1. தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் உலகளவில் ரூ.460 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.

2. அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று ரூ.330 கோடி வசூல் செய்து 2-வது இடத்தில் உள்ளது.

3. வேட்டையன்

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்து பேசுகிறது. இப்படம் ரூ.255 கோடி வசூல் செய்து 3-வது இடத்தில் உள்ளது.

4. மகாராஜா

நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.170 கோடி வசூல் செய்து 4-வது இடத்தில் உள்ளளது.

5. ராயன்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் ரூ.156 கோடி வசூல் செய்து 5-வது இடத்தில் உள்ளது.

6. இந்தியன் 2

28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் 'இந்தியன் 2'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ரூ.151 கோடி வசூல் செய்து 6-வது இடத்தில் உள்ளது.

7. கங்குவா

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சரித்திர படமாக உருவாகியுள்ள இப்படம் ரூ.105 கோடி வசூல் செய்து 7-வது இடத்தில் உள்ளது.

8. அரண்மனை 4

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான படம் 'அரண்மனை 4'. தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இதற்கு முன்பு வெளியான அரண்மனை 1, 2, 3 போன்ற படங்களுக்கு கிடைத்த அதே வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து 8-வது இடத்தில் உள்ளது.

9. அயலான்

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரூ.81 கோடி வசூல் செய்து 9-வது இடத்தில் உள்ளது.

10. கேப்டன் மில்லர்

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில், கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ரூ.78 கோடி வசூல் செய்து 10-வது இடத்தில் உள்ளது.


Next Story