'தக் லைப்' படத்தின் முதல் பாடல் வெளியீடு


Thug Life first song out now
x
தினத்தந்தி 18 April 2025 1:18 PM IST (Updated: 20 April 2025 5:30 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் 'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி இருக்கிறது. இப்பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதி இருக்கிறார்.

1 More update

Next Story