இந்த ஆண்டின் முதல் 'பூஜா ஹெக்டே' படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு


This years first Pooja Hegde film - release date announced
x

பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ள இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இதில், தேவா படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில், தேவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 31-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டு வெளியாகும் பூஜா ஹெக்டேவின் முதல் படமாக அமைந்துள்ளது. தளபதி 69 படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் ரெட்ரோ கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story