'தபாங் 2-ல் நடிக்காததற்கு இதுதான் காரணம்' - நடிகர் சோனு சூட்
சல்மான் கான் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு தபாங் 2 வெளியானது.
சென்னை,
கடந்த 2010-ம் ஆண்டு அபினவ் காஷ்யப் இயக்கத்தில் வெளியான படம் தபாங். இப்படத்தில், சல்மான் கான், சோனாக்சி சின்ஹா, சோனு சூட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதன் 2-ம் பாகம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தில் தனது கதாபாத்திரமான ஜெடி சிங் இறந்த காரணத்தால் இதில் சோனு சூட் நடிக்கவில்லை. இந்நிலையில், ஜெடி சிங்கின் சகோதரராக நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால், அதை தான் மறுத்ததாகவும் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் , 'சல்மான் கான் மற்றும் அப்ராஸ் இருவரும் என் குடும்பத்தில் ஒருவர்போல. அவர்கள் என்னை தபாங் 2-ல் ஜெடி சிங்கின் சகோதரராக நடிக்க அழைத்தனர். ஆனால், நான் அதை மறுத்துவிட்டேன். ஏனென்றால், அந்த கதாபாத்திரம் எனக்கு அந்த அளவுக்கு உற்சாகத்தை கொடுக்கவில்லை' என்றார்.
சோனு சூட் தற்போது பதேஹ் படத்தில் நடித்துள்ளார். இதை இவரே இயக்கியும் , தயாரித்தும் இருக்கிறார். இப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது.