புத்துணர்ச்சியாக இருக்க இதுதான் காரணம்...கயாடு லோஹர் பகிர்ந்த டிப்ஸ்


This is the reason to stay fresh...Tips shared by Kayadu Lohar
x

நடிகை கயாடு லோஹர் அவருடைய புத்துணர்ச்சிக்கான காரணத்தினை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, 2022ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பிலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் 'டிராகன்'. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது கயாடு, 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகை கயாடு லோஹர் அவருடைய புத்துணர்ச்சிக்கான காரணத்தினை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, அதிகாலை எழுந்ததும் குறைந்தபட்சம் ஒருமணி நேரம் யோகா செய்த பின் அரைமணி நேரம் ஸ்ட்ரெச்சிங் பயிற்சியும் 1 மணி நேரம் நடைபயிற்சியும் செய்வதாக கூறியுள்ளார்.

1 More update

Next Story