தண்டேல் :'அவரின் கதாபாத்திரத்தில் அது அதிகம் இருந்தது' - கார்த்தி

'தண்டேல்' திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் 'தண்டேல்' திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார். அப்போது அவர் , தண்டேல் படத்தில் நாக சைதன்யாவின் கதாபாத்திரத்தில் நிறைய அப்பாவித்தனத்தை கவனிக்க முடியும் என்று கூறினார், மேலும், சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் என்றும் படத்தின் இயக்குனர் சந்து மொண்டேட்டி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
'தண்டேல்' படம் அடுத்த மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.