'சிக்கந்தர்' படத்தின் டைட்டில் டிராக் டீசர் வெளியீடு


The teaser for our title track is here
x

இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

மும்பை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தற்போது பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கி இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், நேற்று இப்படத்தின் டைட்டில் டிராக் டீசர் வெளியாகி உள்ளது. மேலும், இப்பாடல் இன்று வெளியாகிறது.


Next Story