ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த 'வேட்டையன்' படக்குழு


தினத்தந்தி 19 Aug 2024 10:18 AM IST (Updated: 19 Aug 2024 1:47 PM IST)
t-max-icont-min-icon

'வேட்டையன்' படத்தின்' ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளவர் ரஜினிகாந்த். இவர் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

மேலும், இப்படத்தில் ரஜினியுடன், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இன்று வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். அதன்படி, அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதேபோல், சூர்யாவின் 'கங்குவா' படமும் அக்டோபர் 10 -ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story