''தி ராஜாசாப்'' டீசர்: எதிர்பார்ப்புகளை அதிகரித்த பிரபாஸின் புதிய போஸ்டர்

இன்று மதியம் வெளியான பிரீ-டீசர், நாளை வெளியாக உள்ள டீசருக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.
சென்னை,
நடிகர் பிரபாஸின் திகில் நகைச்சுவை படமான 'தி ராஜா சாப்' படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீசர் நாளை காலை 10:52 மணிக்கு வெளியாக உள்ளது.
இன்று மதியம் படக்குழு வெளியிட்டிந்த பிரீ-டீசர், நாளை வெளியாக உள்ள டீசருக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. இந்நிலையில், எதிர்பார்ப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரபாஸின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
ஸ்டைலான தோற்றத்தில் அதில் பிரபாஸ் உள்ளார். இப்படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Related Tags :
Next Story






