14 ஆண்டுகளை நிறைவு செய்த 'தென்மேற்குப் பருவக்காற்று' திரைப்படம்
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தென்மேற்குப் பருவக்காற்று .
சென்னை,
கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு படுவக்காற்று படத்தில் ஹீரோயினாக நடித்தவர் வசுந்தரா. கிராமத்து பெண் ரோலில் அவர் கச்சிதமாக நடித்து இருப்பார். அவர் அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்திருக்கிறார்.
தன் பட்டியில் ஆடுகளை திருட வரும் கும்பலில் ஒருவரை மடக்கி பார்க்கும் போது அது பெண்ணாக இருக்க, நாயகன் முருகையா அவளின் முகத்தை பார்த்த கணத்தில் காதலாகிறான். அந்த காதலினால் தன் தாய் வீராயி பார்த்து வைத்திருக்கும் முறைப் பெண்ணையும் விலக்கி வைக்கிறான். களவாணிக் குடும்பத்திலிருந்து நிச்சயம் நான் பெண்ணெடுக்க மாட்டேன் அப்படி மீறி அவளை திருமணம் செய்தால் சங்கரத்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள் வீராயி. முருகையா எங்கே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று அவனை கொலை செய்ய முயற்சிக்கிறது களவாணிப் பெண்ணின் அண்ணன் கும்பல். அதனால் அவர்களை போலீஸில் காட்டிக் கொடுக்கிறான் முருகையன். மேலும் காண்டாகி சுத்தும் அவர்களிடமிருந்து காதல் ஜோடி ஜெயித்ததா என்பதுதான் கதை.
தென்மேற்கு பருவக்காற்றில் நாயகன் விஜய் சேதுபதியின் முருகையன் கதாபாத்திரத்தை விடவும், சரண்யா பொன்வண்ணன் ஏற்று நடித்த வீராயி கதாபாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது. நாயகன் முருகையா, நாயகி பேச்சி என எல்லா கதாபாத்திரங்களும் பேசப்பட்டாலும், அதிகம் பேசப்படாமல் ஆனால் குறைவில்லா தாக்கத்தை கொடுத்த கதாபாத்திரம் கலைச்செல்வி.
காரல் மார்க்ஸ் எழுதிய தாய் காவியம். ரஷ்யாவின் பாவலுடையை தாய் பற்றிய கதை. அந்த தாய் ரஷ்யாவின் ஆன்மாவை வெளிப்டுத்துக்கூடிய ஒரு தாய். இதை என் இளமை காலத்தில் படித்தேன். அப்போது ஏன் என் தாயை பற்றி நாம் கதை எழுதக்கூடாது என்ற கேள்வி என்னுள் எழ காரணமாகவும், உந்துசக்தியாகவும் அது இருந்தது. அப்படி உருவானதுதான் 'தென்மேற்கு பருவக்காற்று' படம் என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படம் தற்போது வரை விஜய் சேதுபதியின் கெரியரில் ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது.
'தென்மேற்குப் பருவக்காற்று', 'தர்மதுரை', 'இடம் பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 5-வது முறையாக இணையவுள்ளது.