வைரலாகும் 'கூலி' படத்தின் மேக்கிங் வீடியோ


The making video of the film Coolie goes viral
x
தினத்தந்தி 24 May 2025 10:21 AM IST (Updated: 24 May 2025 2:51 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது

சென்னை,

தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளதால், இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 'கூலி' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story