'விடுதலை 2' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது


விடுதலை 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
x
தினத்தந்தி 17 Nov 2024 6:01 AM (Updated: 17 Nov 2024 6:02 AM)
t-max-icont-min-icon

வெற்றி மாறன் இயக்கியுள்ள விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ,கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா விடுதலை - 2 பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் தங்களின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளனர். 'விடுதலை 2' படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம் தினமும்' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்து தனது மனதை வருடும் குரலில் பாடியுள்ளார்.


Next Story