3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா?


3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா?
x

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

சென்னை,

அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இப்படத்தை பாராட்டியுள்ளனர். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் அஜித். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது.

விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் உலக அளவில் ரூ.105 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களின் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story