18 வயதிலேயே அந்த அனுபவம்... பிரபல நடிகை இஷா கோபிகர் சர்ச்சை பேட்டி


18 வயதிலேயே அந்த அனுபவம்... பிரபல நடிகை இஷா கோபிகர் சர்ச்சை பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2024 4:24 PM GMT (Updated: 22 Jun 2024 4:27 PM GMT)

இந்தி திரையுலகில் டாப் நடிகராக இருந்த ஒருவர், அவரை சந்திக்க தனியாக வரும்படி கூறினார் என நடிகை இஷா கோபிகர் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழில் காதல் கவிதை, என் சுவாச காற்றே, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை இஷா கோபிகர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்திலும் முக்கிய வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.

பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். 1995-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் டேலன்ட் கிரவுன் பட்டம் வென்றார். பாலிவுட்டில் முதன்முறையாக பிசா என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனவர். தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்தியில், பியார் இஷ்க் அவுர் மொகபத், ஹம் தும், டான் மற்றும் டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். இந்நிலையில், திரை துறையில் தொடக்க காலத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், அப்போது எனக்கு 18 வயது. செயலாளர் ஒருவர் மற்றும் நடிகர் ஒருவர் என்னை அணுகினார்கள். அவர்களுடைய பாலியல் தேவைகளுக்காக தொடர்பு கொண்டனர்.

அவர்கள் என்னிடம், வேலை வேண்டும் என்றால் நடிகர்களுடன் நட்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். நான் ரொம்ப நட்பாக பழக கூடியவள். ஆனால், நட்பாக என்றால் என்ன பொருள்? நான் ரொம்ப நட்பாகவே இருப்பேன்.

ஏக்தா கபூர் ஒரு முறை என்னிடம் சில அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும் என கூறினார் என்று இஷா கூறியுள்ளார்.

இதேபோன்று, 23 வயது இருக்கும்போது, இந்தி திரையுலகில் டாப் நடிகராக இருந்த ஒருவர் என்னிடம், கார் ஓட்டுநர் அல்லது வேறு யாரும் இல்லாமல் அவரை சந்திக்க தனியாக வரும்படி கூறினார். முன்னணி நடிகரான அவருக்கு பிற நடிகைகளுடன் உள்ள தொடர்பு பற்றி பல வதந்திகள் அப்போது பரவி வந்தன.

அவர் என்னிடம், ஏற்கனவே நிறைய சர்ச்சைகள் என்னை பற்றி உள்ளன. ஊழியர்களும் வதந்திகளை பரப்புகிறார்கள் என்றார். ஆனால், நான் மறுத்து விட்டேன். என்னால் தனியாக எல்லாம் வரமுடியாது என கூறி விட்டேன். அவர் இந்தி திரை துறையில் பிரபல நடிகராக இருந்தவர் என்று கூறியுள்ளார்.


Next Story