“பாகுபலி: தி எபிக்” படத்தில் தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது - ராஜமவுலி


“பாகுபலி: தி எபிக்” படத்தில் தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது - ராஜமவுலி
x

ராஜமவுலியின் ‘பாகுபலி: தி எபிக்’ திரைப்படம் ரீ-ரிலீஸில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக ‘பாகுபலி தி எபிக்’ என்ற பெயரில் திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் மொத்தமாக 1,150-க்கும் அதிகமான திரைகளில் ‘பாகுபலி: தி எபிக்’ படம் வெளியானது.

இதில் தமன்னாவின் காதல் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற தமன்னாவின் கேரக்டர், இரண்டாவது பாகத்தில் அட்மாஷ்பியர் ஆர்ட்டிஸ்ட் ரேன்ஞ்சுக்கு குறைக்கப்பட்டது, அப்போது விமர்சிக்கப்பட்டது. தற்போது ‘பாகுபலி தி எபிக்’ படத்தில் தமன்னாவின் காட்சிகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இப்படம் ரீ-ரிலீஸில் முதல் நாளில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை ‘பாகுபலி: தி எபிக்’ படைத்துள்ளது. இப்படம் 4 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியிருப்பதாவது, “பாகுபலி' படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ரீதியாகவும், கதை ரீதியாகவும் முக்கியமானது. ஆனால், புதிய பதிப்பு முற்றிலும் கதை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். முதலில் எடிட்டிங் செய்தபோது 4 மணி, 10 நிமிடங்கள் இருந்தது. சினிமா மற்றும் மற்ற துறையிலுள்ள பார்வையாளர்களுக்கு சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்தோம். அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் அதை 3 மணி, 43 நிமிடங்களாக குறைத்தோம். இதனால் தமன்னா, பிரபாஸ் காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் நீக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது” என்றார்.

1 More update

Next Story