'லக்கி பாஸ்கர்' பட இயக்குனருடன் இணையும் சூர்யா!


லக்கி பாஸ்கர் பட இயக்குனருடன் இணையும் சூர்யா!
x

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 44-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு 'ரெட்ரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார்.

இதையடுத்து 'வாத்தி, லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படமானது மாருதி கார்களின் புகழ்பெற்ற 796 சிசி இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் என தெரியவந்துள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கிய 'லக்கி பாஸ்கர்' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மேல் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story