'ஸ்ட்ரீ 2': 'ஆஜ் கி ராத்' பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசிய தமன்னா


ஸ்ட்ரீ 2: ஆஜ் கி ராத் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசிய தமன்னா
x
தினத்தந்தி 1 Dec 2024 10:45 AM IST (Updated: 1 Dec 2024 10:46 AM IST)
t-max-icont-min-icon

'ஸ்ட்ரீ 2' படம் வெற்றி பெற்றதற்கு 'ஆஜ் கி ராத்' பாடலுக்கும் பங்கு உள்ளது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

மும்பை,

ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'ஸ்ட்ரீ' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளியானது.

ஹாரர் காமெடி கதைக்களத்தில் வெளியான ஸ்ட்ரீ 2 வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற 'ஆஜ் கி ராத்' பாடலும் ரசிகர்களை கவர்ந்தது. இப்பாடலுக்கு நடிகை தமன்னா நடனம் ஆடியிருந்தார். இந்நிலையில், இப்படம் வெற்றி பெற்றதற்கு இப்பாடலும் ஒரு காரணம் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

' ஸ்ட்ரீ 2' வெற்றிக்கு 'ஆஜ் கி ராத்' பாடலுக்கும் பங்கு உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால், அதை ஒப்புக்கொள்வது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. இப்பாடலுக்காக எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இதற்கு மேல் நான் எதை கேட்க முடியும்'என்றார்.


Next Story