மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஸ்ரீலீலா...எந்த படத்தில் தெரியுமா?


Sreeleela to share screen with Ram Charan? Fans await clarity
x

'கிஸ்ஸிக்' பாடலில் நடனமாடிய பிறகு நடிகை ஸ்ரீலீலாவின் புகழ் நாடு முழுவதும் பரவியது.

சென்னை,

'புஷ்பா 2' படத்தில் அல்லு அர்ஜுனுடன் 'கிஸ்ஸிக்' என்ற சிறப்புப் பாடலில் நடனமாடிய பிறகு நடிகை ஸ்ரீலீலாவின் புகழ் நாடு முழுவதும் பரவியது. விரைவில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் இவர் அறிமுகமாக உள்ளார்.

இது மட்டுமில்லாமல், அகிலுடம் 'லெலின்', ரவி தேஜாவுடன் 'மாஸ் ஜாதரா' மற்றும் தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திலும் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.

இந்நிலையில், ராம் சரணின் 'பெத்தி' படத்தில் ஸ்ரீலீலா நடனமாட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஒரு குத்து பாடலுக்கு ஸ்ரீலீலாவை நடனமாட வைக்க 'பெத்தி' பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்ரீலீலா மீண்டும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

'பெத்தி' படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புச்சி பாபு சனா இயக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story