'ஸ்பிரிட்' - பிரபாஸுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை?


Spirit Prabhas to romance this beauty once again
x

இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

சென்னை,

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'தி ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் 'ஸ்பிரிட்' படம் பிரபாஸின் 25-வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸுடன் மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக கூறப்படும்நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் மிருணாள் தாகூரும், தீபிகா படுகோனும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story