ஸ்பைடர்மேன், ஹல்க் இல்லையா?...'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' நடிகர்கள் பட்டியல் வெளியீடு

இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சென்னை,
ஸ்பைடர் மேன், பேட்மேன், அயன்மேன், ஹல்க், தார், உள்பட சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வசூலையும் வாரி குவிக்கின்றன. அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ படத்துக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவெஞ்சர்ஸ் பட வரிசையில் தற்போது 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' என்ற படம் தயாராகி வருகிறது.
'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தை இயக்கி வருகின்றனர். இதில் ராபர்ட் டவுனி ஜுனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் அடுத்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில்
ராபர்ட் டவுனி ஜுனியர் - டாக்டர் டூம்
புலோரன்ஸ் பக் - பிளாக் விடோ
பால் ரட் - ஆன்ட் மேன்
ஆண்டனி மெக்கி - கேப்டன் அமெரிக்கா
கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் - தோர்
பாட்ரிக் ஸ்டூவர்ட் - புரொபசர் எக்ஸ்
செபாஸ்டியன் ஸ்டான்- பக்கி பார்ன்ஸ்/ வின்டர் சோல்ஜர்
லெட்டிட்டா ரைட் - அயர்ன்ஹார்ட்
வனெஸ்ஸா கிர்பி - இன்விசிபிள் உமன்
டாம் ஹிடில்ஸ்டன் - லோகி
எபான் மோஸ் - திங்
வியாட் ரஸ்ஸல் -யுஎஸ் ஏஜென்ட்
ஜோசப் குயின் - ஹியூமன் டார்ச்
ஐயன் மெக்கெல்லன் - மெக்னீட்டோ
சிமி லியு - ஷான் சி
கெல்ஸி கிராம்மர் - பீஸ்ட்
பெட்ரோ பாஸ்கல் - மிஸ்டர் பென்டாஸ்டிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஸ்பைடர்மேன் , டாக்டர் ஸ்ட்ரேஞ் கம்பர்பேக், ஹல்க் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாலும், மார்வெல் சில கேரக்டர்களை கடைசி வரை ரகசியமாக வைத்திருக்கும் என்பதால் திரையரங்கில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.