‘பிசாசு 2’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு | Special poster release of the film ‘Pisasu 2’

ஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி 'பிசாசு 2' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு


ஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி பிசாசு 2 படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு
x

நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘பிசாசு-2’ படக்குழு.

சென்னை,

கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பிசாசு'. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி முடித்துள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி பிசாசு 2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிசாசு 2 திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story