மீண்டும் சல்மான் கானுடன் இணையும் தென்னிந்திய முன்னணி நடிகை?


South Indian leading actress to team up with Salman Khan once again?
x

அட்லீயின் 6-வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

சென்னை,

'ராஜா ராணி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' என மூன்று பிளாக்பஸ்டர் படங்களையும் இயக்கினார். மக்கள் இப்படங்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கினார். இந்திய சினிமாவில் மிக அதீக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் 5-வது இடத்தை ஜவான் பிடித்தது. இப்படம் 1,200 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அட்லீயின் 6-வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக தென்னிந்திய முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருகிறது. ஏற்கனவே சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, மீண்டும் சல்மான் கானுடன் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story