சவுந்தர்யா ரஜினிகாந்த் மதுரை கள்ளழகர் கோவிலில் வழிபாடு


சவுந்தர்யா ரஜினிகாந்த் மதுரை கள்ளழகர் கோவிலில் வழிபாடு
x

மதுரை கள்ளழகர் திருக்கோவிலுக்கு கணவருடன் சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த் மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டார்.

மதுரை,

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். அவர் 'கோவா' திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். பின்னர், ரஜினியின் 'கோச்சடையான்', தனுஷின்'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.

இந்நிலையில் இன்று மதுரையில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலுக்கு சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய கணவர் விசாகனுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார். மனமுருகி பிராத்தனை செய்து கள்ளழகரை வழிபட்டார்.


Next Story