சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு கூட வருவதில்லை - வைரலாகும் பிரபல நடிகரின் கருத்து

அவர் சொன்னது யாரை என்று தெரியவில்லை என்றாலும், இந்த கருத்து வைரலாகி வருகிறது.
மும்பை,
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, யாமி கவுதம் நடித்திருக்கும் படம் 'ஹக்'. பெண்கள் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை சுபர்ண் எஸ் வர்மா இயக்கி உள்ளார். இப்படம் நவம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், பேட்டி ஒன்றில் இம்ரான் ஹாஷ்மி சொன்ன கருத்து இணையத்தில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. யாமி கவுதம் சரியான நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதாக பாராட்டினார். அப்போது தொகுப்பாளர், நடிகர்கள் இன்னும் சரியான நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில்லையா? என்று கேட்டார், அதற்கு இம்ரான் ஹாஷ்மி, "சரியான நேரத்தில் வருவதை விடுங்கள், சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு கூட வருவதில்லை" என்று பதிலளித்தார்.
இம்ரான் சொன்னது யாரை என்று தெரியவில்லை என்றாலும், இந்த கருத்து வைரலாகி வருகிறது. இம்ரான் சமீபத்தில் பவன் கல்யாணின் ஓஜி படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






