10 நாட்களில் 10 கிலோவா?...வெற்றிமாறன் படத்திற்காக எடை குறைத்த சிம்பு

சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,
நடிகர் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெறும் 10 நாட்களில் 10 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது படத்தை பற்றிய பரபரப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






