ஸ்ருதிஹாசன் விலகல்...புதிய கதாநாயகியை அறிவித்த 'டகொயிட்' படக்குழு


Shruti Haasans exit...Dacoit team announces new heroine
x

ஸ்ருதிஹாசன் விலகியதை அடுத்து இப்படத்தின் புதிய கதாநாயகி யார் என்று ரசிகர்களிடையே கேள்வி எழும்பியது.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் அதிவி சேஷ். இவர் தற்போது ஷானியல் டியோ இயக்கத்தில், 'டகோயிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சுப்ரியா யர்லகடா மற்றும் சுனில் நரங் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார்.

முன்னதாக இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வந்தார். ஆனால், பின்னர் சில காரணங்களுக்காக அவர் படத்தில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார்? என்று ரசிகர்களிடையே கேள்வி எழும்பியது.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக 'டகோயிட்' படக்குழு நேற்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் நாளை அதாவது இன்று, புதிய கதாநாயகி யார் என்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ருதிஹாசன் விலகியதை அடுத்து புதிய கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே இணையத்தில் மிருணாள் தாக்கூர்தான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தநிகையில், தற்போது அது உண்மையாகி இருக்கிறது.


Next Story