பிக்பாஸ் பிரபலம் மாரடைப்பால் உயிரிழப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தி பிக்பாசில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷிபாலி ஜெரிவாலா
மும்பை,
இந்தி பிக்பாசில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷிபாலி ஜெரிவாலா (வயது 42). இவர் சல்மான்கான், அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா நடித்த முஜி ஷாதி கரோகி படத்தில் சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், ஷிபாலி ஜெரிவாலாவுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கணவர் பிராக் தியாகி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், ஷிபாலியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ஷிபாலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் பிரபலம் ஷிபாலி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






