"புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2" அப்டேட் கொடுத்த செல்வராகவன்


புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட் கொடுத்த செல்வராகவன்
x
தினத்தந்தி 23 Nov 2024 1:55 PM IST (Updated: 26 Nov 2024 7:10 AM IST)
t-max-icont-min-icon

'சொர்க்கவாசல்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது செல்வராகவன் 'புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகிய படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பிறகு, '7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம்' போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். குறிப்பாக புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த 'சாணிக் காயிதம்' திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இவர் தற்போது பல படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து 'சொர்க்கவாசல்' படத்தில் நடித்துள்ளார்.

இந்த 'சொர்க்கவாசல்' திரைப்படம் வருகிற 29-ந் தேதி வெளியாக உள்ளது. அதற்கான படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் செல்வராகவன் கலந்து கொண்டுள்ளனர். அப்போது புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு "புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் கதைகளை வெப் தொடர்களாக உருவாக்க திட்டமிட்டு உள்ளேன். வெப் தொடர்களாக எடுத்தால் நேரம் அதிகமாக கிடைக்கும், அதனால் சொல்ல வர கருத்தை படத்தின் மூலம் தெளிவாக கூற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story