ரசிகர்களுக்கு சூர்யா நற்பணி இயக்கம் வேண்டுகோள்

ரசிகர்களுக்கு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.
அதன்படி, கோடைகால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர் வழங்குதல், மக்கள் நடமாடும் இடங்களில் நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை வரும் நாட்களில் முன்னெடுக்குமாறு ரசிகர்களுக்கு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Related Tags :
Next Story






