மீனாட்சி சவுத்ரியின் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'பட டிரெய்லரை வெளியிட்ட மகேஷ் பாபு


Sankranthiki Vasthunam Trailer
x

'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சென்னை,

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' மற்றும் விஜய்யின் 'தி கோட்' ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள இவர், 'லக்கி பாஸ்கர்' , மட்கா, உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் வெங்கடேஷ் நடித்துள்ள 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய் குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.


Next Story